2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஜூன் 21 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம் 

 

சீமெந்து சலவை இயந்திரத்தில் சிக்குண்டு கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில், இளைஞரொருவர் இன்று (21)அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த ஒபூர்தீன் சாஜித் (24 வயது) என்பவரே, இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன், கம்பெரலிய வேலைத்திட்டத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,  சீமெந்த சலவை இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வியந்திரத்தைப் பழுது பார்ப்பதற்காக கையை உள்ளே செலுத்தியதாகவும் இதன்போது,  சக உதவியாளர் இயந்திரத்தை இயக்கியதால் இளைஞனின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இளைஞன் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .