2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கொப்பருக்குள் சிக்கிய இளைஞன் பலி

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார்  

திருகோணமலை, மிட்சுயி சீமெந்து தொழிற்சாலையில் இன்று (27) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீனக்குடா பகுதி, ஜனசக்திபுரத்தைச் சேர்ந்த அன்டனி ஸ்டீபன் என்பரே இவ் விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவத்தில் சிக்குண்டு உயிரிழந்த இளைஞன் இந்த சீமெந்து தொழிற்சாலையில் சுமார் நான்கு ஆண்டுகள் கடமையாற்றிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, புதிதாக கொண்டுவரப்பட்ட கொப்பர் இயந்திரத்தில் கப்பலிலிருந்துவரும் சிலிக்கன் மண்ணை ஏற்றிவந்தபோது, அதிக நிறையை தாங்கிக் கொள்ள முடியாது கொப்பர் இயந்திரம் சரிந்தமையால், கொப்பருக்குள் சிக்கி இளைஞன் பலியாகியுள்ளதாக தெரிவித்தனர்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X