Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
“எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், கொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் எனக் கூறியிருப்பர்” என, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
திருகோணமலை, கோமரங்கடவல பிரதேசத்தில் நேற்று (09) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தற்போது ஆட்சியில் இருப்போர், நாட்டைக் கட்டியெழுப்பவா மூன்றில் இரண்டு கேட்கிறார்கள்? தமது அதிகாரத்தைப் பலப்படுத்தி, நாட்டை ஒரு குடும்பம் தமது விருப்பம்போல் ஆட்சி செய்யவே, இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கோருகின்றனர்” என்றார்
“2010ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட்டது. அப்போது இந்தப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, நாட்டை அபிவிருத்தி செய்தார்களா? இல்லை. ராஜபக்ஷ குடும்பம் வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் இருக்க 18ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
“அன்று எமது ஆட்சியில், இப்போதுள்ள அமைச்சர்கள் சிலர், மூளைக்கு சிறிதும் சம்மந்தமில்லாமல் சில குற்றச்சாடுகளை முன்வைத்தனர். அவர்கள் கூறும் பொய்களை, உண்மைபோல் காட்ட இரு ஊடகங்கள் அவர்களுக்கு உதவி புரிந்தன.
“நல்லவேளை இன்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இல்லை. அவ்வாறு இருந்திருப்பின், கொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் என்று கூறியிருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
3 hours ago
7 hours ago
13 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
13 Aug 2025