Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்கும் பொருட்டு, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூம், கிழக்குமாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சீனாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அங்கு பலர் மரணமடைந்தும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளதை அறிவீர்கள்.
“இவ்வைரஸானது, தென்கிழக்காசிய நாடுகள், ஆசிய நாடுகள் என்பவற்றுக்கும் பரவிவருகின்றது. இலங்கையிலும் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இலங்கைக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப்பயணி என கண்டறியப்பட்டுள்ளது” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“கிழக்கு மாகாணம், சுற்றுலாத்துறைக்கு பெயர் போன இடமாகும். முக்கியமாக, திருகோணமலையில் நிலாவெளி கடற்கறை, மட்டக்களப்பில் பாசிக்குடா கடற்கறை, அம்பாறையில் அறுகம்பே கடற்கறை என்பன புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்கலாகும்.
“இவற்றைக் கருத்திற்கொண்டு, கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாமல் இருப்பதைத் தடுப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago