எப். முபாரக் / 2017 நவம்பர் 18 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரொருவரை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
கன்னியா, கிளிக்குஞ்சுமலைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம், திருகோணமலைப் பகுதியில் இனந்தெரியாதோரால் நபரொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், நேற்று முன்தினம் (16) உப்புவெளி பொலிஸாரால், குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் நேற்று (17) ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
1 hours ago