Editorial / 2018 நவம்பர் 01 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை, நாலந்தாபுர முனியப்பர் கோவில் காணி தொடர்பில், இரு குழுக்களுக்கிடையே நேற்றிரவு (31) இடம்பெற்ற மோதலில், 4 பேர் காயங்களுக்குள்ளான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இந்தக் கைகலப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், சீனக்குடா பொலிஸ் தெரிவித்தனர்.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பல வருடங்களாக சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்த மேற்படி கோவில் வளாகத்தைச் சுற்றி, நபரொருவர் அடையாளப்படுத்துவதற்காக கம்பி வேலிகளை அமைக்க முற்பட்டுள்ளார்.
இதன்போதே, இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், கைகலப்புத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காணி தொடர்பான அறிக்கைகளை, காணி ஆணையாளரிடம் கோரியுள்ளதாகவும் சீனக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.
17 minute ago
20 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
23 minute ago