Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் சாரதிக்கும் தனியார் பஸ் சாரதிக்குமிடையில் திங்கட்கிழமை (21) மாலை ஏற்பட்ட கைகலப்பில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் சாரதி காயமடைந்ததைத் தொடர்ந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் தனியார் பஸ் சாரதியை கைதுசெய்ததுடன், விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த என்.எம்.பைரூஸ் (வயது 31) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேர அட்டவணை தொடர்பில் மேற்படி இரு சாரதிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக தெரியவருகின்றது.
மூதூர் டிப்போவுக்குச் சொந்தமான சாரதி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட முந்திச் சென்றதாக தனியார் பஸ் சங்கத்தினர் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago