2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானைகள் விரட்டியடிப்பு

Thipaan   / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெற்கு பிரதேச கிராமங்களுக்குள் புகுந்து, மக்களை அச்சுறுத்திய காட்டு யானைகளை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விரட்டியடித்துள்ளனர்.

கிராமங்களான கிளிவெட்டி, நாராயணபுரம், ஜின்னாநகர், மேன்கமம், முன்னம் பொடி வெட்டை போன்ற கிராமங்களுக்குள் நுழையும் யானைகள், தென்னை மரங்கள் மற்றும் வாழைத் தோட்டங்களை நாசமாக்கி வந்தன.

இதன் காரணமாக, இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள்,  இரவு நேரங்களில் நித்திரையும் இல்லாமல் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்துவந்ததுடன், இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 2.00 மணியளவில் கிராமத்துக்;கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள் அதிகாரிகள் பத்துப் பேர், அங்கு தங்கி நின்று யானைகளை எதிர்பார்த்திருந்தனர்.

கிராம வயல் வெளிகளுக்குள், இரவு வேளை நுழைந்த யானைகளை  அவதானித்த அதிகாரிகள், யானைகளை வெடிவைத்துத் துரத்தினர்.

இதனால், கிராமத்தில் யானைகளால் ஏற்படவிருந்த அழிவு தடுக்கப்பட்டுள்ளது என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுவரை இக்கிராமங்களில் 74 தென்னைமரங்களும் நூற்றுக்கணக்கான வழை மரங்களும் யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த விவசாயிகள், அல்லைகாடுகளில் இருந்து பல முனையில் வரும் யானைகளை எல்லையில் வைத்து திருப்பியனுப்பினாலேயே, நிரந்தரமான தீர்வு வரும் என தெரிவித்தனர்.

இதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளப்பட வேண்டும் என, வருகைதந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .