Suganthini Ratnam / 2016 மே 30 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்
திருகோணமலை, தங்கபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய கஜேந்திரன் தர்ஷான் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவரக் கட்டப்படாத இந்தக் கிணற்றில் தவறி விழுந்த இந்தக் குழந்தையை தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
வீட்டுக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (29) மாலை விளையாடிக்கொண்டிருந்த இந்தக் குழந்தையை காணவில்லை என்று தேடியதாகவும் இதன்போது, வீட்டு வளவில் அமைந்துள்ள இந்தக் கிணற்றைப் பார்வையிட்ட வேளையில் சிறுவன் கிணற்றில் விழுந்து காணப்பட்டதை அவதானித்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
7 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
14 minute ago