Suganthini Ratnam / 2016 மார்ச் 14 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திகட்டுவௌப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை நான்கு வயதுடைய எல்.நிமேஷ் என்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிறுவனின் தந்தையும் தாயும் கொழும்பில் தனியார் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்ற நிலையில், தந்தையின் தாயாருடன் சிறுவன் இருந்துவந்துள்ளான்.
இந்தச் சிறுவனை நீண்டநேரமாகக் காணாமையைத் தொடர்ந்து தேடியபோது, கிணற்றில் சிறுவனின் சடலமாகக் காணப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago