2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கிண்ணியாவில் பெற்றோரின் பராமரிப்பின்றி 613 சிறுவர்கள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இற்றைவரை கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவில் 613 சிறுவர்கள் பெற்றோரின் பராமரிப்பிலிருந்து விடுபட்டு, உறவினர்களின் பராமரிப்பிலுள்ளதாக தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபையின் கிண்ணியாப் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எம்.எம்.ஜெம்;ஸித், நேற்று  ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பணிப்பெண்களாக தாய்மார்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதும் பெற்றோரின் பராமரிப்பிலிருந்து சிறுவர்கள் விடுபடுவதற்கு பிரதான காரணமெனவும் அவர் கூறினார்.

மேலும், தாய்மார்கள் வெளிநாடு சென்றதன் காரணமாக முறையான பராமரிப்பின்மையால் 80 சதவீதமான சிறுவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர். மேலும், இப்பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றுள்ள 90 சதவீதமான திருட்டுச் சம்பவங்கள்; மற்றும் 90 சதவீதமான சிறுவர் துஷ்பிரயோகங்களில் தாய்மார்களின் பராமரிப்பு இல்லாத சிறுவர்களே சம்பந்தப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் இப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள  80 சதவீதமான திருட்டுச் சம்பவங்களில் 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களே சம்பந்தப்பட்டுள்ளனர். அதிலும் அலைபேசி திருட்டுச் சம்பவங்கள்  தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பெற்றோரின் பராமரிப்பு இன்மையினால் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல், பாடசாலை இடைவிலகல், இளவயதுத் திருமணம், இளவயதுக் கர்ப்பம் போன்றவை  சமூகத்தில் அதிகரித்து வருகின்றன.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் பைசல் நகர், சூரங்கல், ஆயிலயடி, நடுஊற்று போன்ற கிராம அலுவலர்; பிரிவுகளில் பெண்கள் வெளிநாடு செல்லும் தொகை  அதிகரிக்கின்றன. ஆயிலயடி, நடுஊற்று கிராம அலுவலர் பிரிவுகளில்; அதிகளவில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்துவது தொடர்பிலும் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .