Kogilavani / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை வீதிகளில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடுகளை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் வான் எலவுக்குச் செல்லும் பிரதான வீதியோரங்களில் கொட்டப்படுவதால் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் குடியிருக்க முடியாதிருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கள் வாழும் பகுதிகளிலேயே கொட்டப்படுகின்றன. இரவில் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் யானைகள், குப்பைகளை உண்ணுவதுடன் பகல் நேரங்களிலும் வீடுகளை நோக்கி வருவதால் தாம் அச்சத்துடன் வாழவேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபையின் செயாலாளர், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
3 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
42 minute ago