2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கையெழுத்து வேட்டை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

'பெண்களுக்கு எதிரான  அனைத்து வன்முறைகளையும் இல்லாத ஒழிப்போம்; என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதிக்கு 1,500 தபாலட்டைகளை அனுப்பும் வகையில் கையெழுத்து வேட்டை திருகோணமலை -அநுராதபுரம் சந்தியில் நேற்று நடைபெற்றது.  

திருகோணமலை மாவட்டப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கையெழுத்து வேட்டையில்  பலர் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் விரைவாக விசாரணை செய்து  குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்கள்  அமைக்க வேண்டும்.
 

இலங்கையில் ஏற்கெனவே உள்ள பெண்கள், சிறுவர்கள்; தொடர்பான சட்டத்தை மீள்பரிசீலித்து அதை  அமுல்படுத்துவதிலுள்ள  நடைமுறைச் சிக்கல்; நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

கிராமங்களிலும் தொழில் ஸ்தாபனங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். அல்லது அரசசார்பற்ற நிறுவனங்கள் இது தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
 பாடசாலை மாணவர்களின் வயதிற்கேற்ப படிப்படியாக பாலியல் கல்வி முறைமை கல்விப்பொறிமுறையில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

 பாலியல் குற்றம் இழைத்தவர்களுக்கு பிணை வழங்குவது முற்றாக நிறுத்தப்படல் வேண்டும் அல்லது பிணைக்கான உச்சகாலப ;பகுதிக்குள் வழக்கானது விரைவாக தீர்க்கப்படல் வேண்டும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X