Princiya Dixci / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

- பதுர்தீன் சியானா
திருகோணமலை, மகாதிவுள்வௌ குளத்தில் காணப்படுகின்ற கல் மலையொன்று, வெள்ளத்தால் சூழப்பட்டதால் வரட்சிக் காலத்தில் நீர் தேடிச் சென்று தஞ்சம் புகுந்த சுமார் 40க்கும் அதிகமாக குரங்குகள், மீண்டும் காட்டுக்குச் செல்ல முடியாத நிலையில் உயிரிழக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்படடுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் வரட்சி நிலவிய காலத்தில் குடிநீருக்காக வேண்டி அலைந்து திரிந்த குரங்குகள் கல் மலையொன்றில் தங்கியிருந்துள்ளன.
அதனையடுத்து வெள்ளம் ஏற்பட்ட பின்னர் குளத்தில் அதிகளவில் நீர் வந்தமையினால் அக்கல் மலை நீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் நீரினால் மூடப்பட்ட கல்மலையில் சிக்கிய குரங்குகளில் சுமார் நான்கு குரங்குகள் வரை உயிரிழந்து காணப்படுவதுடன், மீதமுள்ள 40க்கும் அதிகமான குரங்குகள் உணவு இன்றி உயிர் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குளத்துக்கு நடுவில் கல்மலையில் சிக்குண்ட குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு தெரியப்படுத்தியும் குரங்குகளைக் காப்பாற்ற இதுவரை நடவடிக்கையெடுக்கவில்லை எனவும் மீனவர் குற்றஞ்சுமத்துகின்றனர்.
குரங்குகளை மீட்பது குறித்தி திருகோணமலை மாவட்ட வனப்பாதுகாப்பு அதிகாரி லலித் குமாரவிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது, குரங்குகளை மீட்பது தங்களுடைய கடமையில்லை. இருந்த போதிலும் மனிதாபிமான முறையில் மீட்பதற்கு உதவிகளை வழங்குவதாகவும் காட்டு யானைகளின் விடயத்தில் அதிகளவில் அக்கறை காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026