Suganthini Ratnam / 2016 மே 23 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, ரொட்டவெவ பிரதேசத்தில் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
35 வயதுடைய இந்தச் சந்தேக நபர், ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் இரவில் உறங்குவதாகவும் அதிகாலை எழுந்து கஞ்சா பாவிப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று பொலிஸார் தேடுதல் மேற்கொண்டபோது, சந்தேக நபரிடம் கேரளா கஞ்சாவும் தங்கூசி வலையும் இருந்தமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து கஞ்சாவையும் தங்கூசி வலையையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீனவர் போன்று தன்னை இனங்காட்டிக் கொள்ளும் இவர், மீன் வலைகளைப் போடும் பையினுள் கஞ்சாவைக் கொண்டுவந்து, மீனவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
11 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago