2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கேரளா கஞ்சா வைத்திருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

கேரளா கஞ்சா 3,100 மில்லிகிராமை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாவட்ட நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ், இன்று புதன்கிழமை (24) உத்தரவிட்டார்.

கோமரங்கடவெலப் பகுதியிலிருந்து கேரளா கஞ்சாவினை ஹொரொவ்பொத்தானைப் பிரதேசத்துக்கு கொண்டு செல்லும் போதே இவரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர், அநுராதபுரம் மாவட்டம், கெப்பித்திக்கொல்லாவ -வாஹல் கடப் பகுதியைச் சேர்ந்த டிங்கிரி பண்டாகே தினேஷ் இலங்கரத்ன (வயது 29) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோமரங்கடவெலப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .