2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

Thipaan   / 2016 ஜூன் 14 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 20ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 23ஆம் திகதிவரை விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலகங்கள் மற்றும் பயிற்சி மையங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள், 18 தொடக்கம் 39 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்த முறை தேர்வு உற்பத்தி மற்றும் கடற்றொழில் என்பவற்று நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சை ஜூலை மாதம்,  ஒன்லைன் முறையில் இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சை, கொரிய கணினி மையங்களில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விவரங்களை வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்று கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X