2025 ஜூலை 28, திங்கட்கிழமை

குளங்களை புனரமைத்து விவசாயிகளுக்கு உதவுமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் சம்பூர் பிரதேசங்களிலுள்ள குளங்களை உடனடியாகப் புனரமைப்பதுடன், மீள்குடியேற்றப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பணிப்புரை விடுத்துள்ளார்.     

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இப்பணிப்புரை விடுத்துள்ளார்.

குச்சவெளிப் பிரதேசத்திலுள்ள பெரியகுளம், அதற்கு நீரை உள்வழங்கும் கொக்கன்குளம் அதனுடன் தொடர்புபட்ட வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றை புனரமைக்க வேண்டும். இதேவேளை, சம்பூர் பிரதேசத்திலுள்ள சின்ன நையந்தைக்குளம் வள்ளியக்கன்குளம், வேலங்குளம்  ஆகியவற்றையும் புனரமைக்க வேண்டும்.

இந்தக் குளங்கள் 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் புனரமைக்கப்பட்டன. அதன் பின்னர் இவை கைவிடப்பட்டுள்ளன. ஆகவே, இந்தக் குளங்களை புனரமைப்பதற்கு நீர்ப்;பாசன மற்றும் கமநல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X