2025 மே 21, புதன்கிழமை

குளவி கொட்டு; வயோதிபர் பாதிப்பு

Niroshini   / 2016 ஜூன் 04 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

ஜூம்ஆ தொழுகை நிறைவேற்றிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தோப்பூர் அல்லைநகர் பகுதயைச் சேர்ந்த எஸ்.எம்.காலிதீன் (வயது 60) என்பவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் தொழுகையை நிறைவேற்றி விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது குறித்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மரத்திலிருந்த குளவிக் கூட்டுக்கு கற்களைக் கொண்டு எறிந்து களைத்துள்ளனர்.

இந்நிலையில், குளவிக் கூடு களைந்ததில் அதிலிருந்து வெளியேறிய குளவிகள் இவரை கொட்டியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X