2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணக் காணி அமைச்சரின் வாகனம் விபத்து: ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாண வீதி, காணி மற்றும் மகளிர் விவகாரத்திறன் அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி பயணித்த வாகனம்  இன்று காலை விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக திருகோணமலை நகரிலிருந்து முள்ளிப்பொத்தானைப் பிரதேசம் நோக்கி மாகாணக் காணி அமைச்சர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இதன்போது, முள்ளிப்பொத்தானை 96ஆம் கட்டை கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்பாகவுள்ள வளைவில் இவரது வாகனம் திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.பொடிமெனிக்கே (வயது 43) என்பவரே காயமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X