Suganthini Ratnam / 2016 மே 02 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமுக்கு அம்மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பணித்துள்ளார்.
இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற கல்வி அபிவிருத்திக் கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.
தற்போது நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது. மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து கற்றலை மேற்கொள்ள முடியாத நிலைமை உள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நன்மை கருதி இதனை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago