2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண சபையில் சலசலப்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

கிழக்கு மாகாண சபையின் 64ஆவது அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இன்று வியாழக்கிழமை (06) கூடியபோது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரின் கருத்ததுக்கு இடமளிக்காமையினால், சபையில் சற்றுச் சலசலப்பு ஏற்பட்டது.

உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ கேள்வி  எழுப்ப முற்பட்ட போதே, சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது.  சபையின் தவிசாளர், மஞ்சுள பெர்ணான்டோவைப் பேச அனுமதிக்கவில்லை. அவரை அமருமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதனை கண்டித்த அமைச்சர் ஆரியவதி கலப்பதியும் மேலும் சிலரும்,  மஞ்சுளவுக்கு ஆதரவாகப் பேச முற்பட்டனர். அதனையும் தவிசாளர் அனுமதிக்கவில்லை.

எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பைளைப் பார்த்து, இன்றை கட்சித்தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்குமாறு தவிசாளர் குறிப்பிட்டார்.

இதன்போது பதிலளித்த உதுமாலெப்பை,

'வழமையாக கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்;கு, உரிய நேரத்துக்கு உறுப்பினர்கள் வராமல் பிந்தி வந்த பின்னர், விடயங்களை நிகழ்ச்சி நிரலில் புகுத்த முற்படுகின்றனர். இனிவரும் காலங்களில்அவ்வாறு செய்ய இடமளிக்க முடியாது என கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே, உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோவும் பிந்தி வந்தமையினால் நிகழ்ச்சி நிரலின் படி, தவிசாளர் சபையைக் கொண்டு செல்ல முயல்கின்றார்' எனவும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X