Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல் சலாம் யாசீம்
திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் கடற்கரையில் கடந்த 05ஆம் திகதி கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காண்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை அடையாளப்படுத்தக்கூடிய யாராவது இருப்பின் திருகோணமலை பொது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 026-2222261எனும் இலக்கத்துடனோ அல்லது நிலாவெளி பொலிஸ் நிலைய இலக்கமான 026-2051255 எனும் இலக்கத்துடனோ தொடர்புகளை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலாவெளி கடற்கரையில் கடந்த 5 ஆம் திகதி மாலை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியது.
சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து இந்திய பிரஜை ஒருவரின் அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சடலத்தின் ஆடைப் பையிலிருந்து இந்திய முத்திரை பொறிக்கப்பட்ட பாக்கு பக்கெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறித்த சடலத்தின் வலது கையில் மூன்று உருவங்கள் பச்சை குத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சடலத்தின் வலது கையில் வளையங்களும் காணப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
7 minute ago
20 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
29 minute ago