Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்ல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேக நபர்களை நேற்று அதிகாலை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபர்கள்,அனுமதிப் பத்திரம் இல்லாமல் திருட்டுத்தனமான முறையில் மணல் அகழ்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் ஐந்து சந்தேக நபர்களையும், மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்திய டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றனர். குறித்த ஐந்து சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் ஏற்கனவே முன் குற்றங்கள் உள்ளனவா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago