தீஷான் அஹமட் / 2017 நவம்பர் 15 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளைநாவல் காட்டுப் பகுதியில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர், நேற்று (14) விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் வந்திருந்த உழவு இயந்திரங்கள் இரண்டும், விசேட அதிரடிப்படையினரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி இருவரும், அவர்களது உழவு இயந்திரங்களுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களான இருவரும், மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், மூதூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
1 hours ago