Princiya Dixci / 2021 ஜனவரி 06 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர், இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 7 உழவு இயந்திரங்களும் இரண்டு டிப்பர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், கிண்ணியா, கண்டல் காடு, மணலாறு, பூவரசந் தீவு ஆகிய பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டக் கொண்டிருந்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை, திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
17 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
33 minute ago