2025 மே 19, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படும் கட்டடங்களால் பாதிப்பு அதிகம்

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

சட்டத்துக்கு புறம்பாக நிர்மாணிக்கப்படும் கட்டடங்களால் வெள்ளப்பெருக்கின் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகவும் இவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்தங்கள் ஏற்பட முன்னர் முன்னெச்சரிக்கை நோக்கோடு  அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் ஏற்படும் இழப்புக்களை குறைக்க முடியும் என்றும் முப்படை மற்றும் பொலிஸார் அனர்த்த நிலவரங்களின்போது தமது பூண ஒத்துழைப்பை வழங்குவது பாராட்டுக்குரியது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X