Niroshini / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை தம்பலகாமம் ,மங்கிபிரீச் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டிய மூவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) மாலை வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து உழவு இயந்திரம் மற்றும் சென்சோ இயந்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த வன பாதுகாப்பு திணைக்களத்தினர் குறித்த பகுதியை சுற்றி வளைத்து மரங்களை வெட்டிக்கொண்டிருந்த குறித்த மூவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை இன்று திங்கட்கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago