Princiya Dixci / 2016 மார்ச் 09 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டம், கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி மாடு அறுத்த இருவரை, இன்று புதன்கிழமை (09)அதிகாலை 04 மணியளவில் கைதுசெய்துள்ளதாகக் கந்தளாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய்ப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் படி குறித்த சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் மாட்டின் இறைச்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இரண்டு எருமை மாடுகளையும் பசு மாட்டினையும் அறுப்பதற்காகக் கட்டி வைத்திருந்த நிலையில் அவை மீட்கப்பட்டதாகவும் கந்தளாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் கந்தளாய்ப் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026