Niroshini / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை பாலம்போட்டாறு,முத்துநகர் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றம் இன்று புதன்கிழமை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவதாக திருகோணமலை பிராந்திய மின்பொறியியலாளர் காரியாலயத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சீனக்குடா பொலிஸாரும் பிராந்திய மின்சார உத்தியோகத்தர்களும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபருக்கு தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாய் செலுத்துமாறும் அதனைப் செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்தும் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
13 minute ago
16 minute ago
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
17 minute ago
22 minute ago