Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 28 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல். நௌபர்
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூரில், சதொச மொத்த விற்பனை நிலையம் ஒன்று இல்லாமையால், இங்குள்ள பொதுமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்களை நியாய விலைகளில் கொள்வனவு செய்துகொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்னர்.
தோப்பூர் மற்றும் அதனையண்டிய பகுதியில் அதிகளவான தமிழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், தோப்பூரில் சதொச மொத்த விற்பனை நிலையமொன்றைத் திறக்குமாறு, உரிய அதிகாரிகளிடம் பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் சதொச கிளை திறக்கப்படவில்லை என, மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதில், மக்கள் பாரிய சிரமங்ளை எதிர்நோக்குவதாகவும் எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago