2026 மார்ச் 18, புதன்கிழமை

சமூகமயப்படுத்தப்பட்ட பயிலுனர்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.றனீஸ்

திருகோணலை மாவட்டத்தில் புனர்வாழ்வுப் பெற்று சமூகமயப்படுத்தப்பட்ட பயிலுனர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 16 பயிலுனர்களுக்கு, பால் வளர்ப்பிற்கான மாடுகள் வழங்கும் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (13) நடைபெற்றது.

இந்நிகழ்வு, புனர்வாழ்வு பெற்றவர்களின் சமூக நலன்புரி தொடர்பான அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேஜர் எச்.எஸ்.டி.பெரேராவின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாவட்ட மேலதிக செயலாளர் கே.அருந்தவராஜா, புனர்வாழ்வுப பெற்ற பயிலுனர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் பல உதவிகளை வழங்கிவருவதாகவும் வழங்கப்பட்ட  உதவிகளைக் கொண்டு கடின உழைப்புடன் செயற்படும்போது, எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக நல்லதொரு நிலையை அடையலாமெனவும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்ட  பயிலுனர்களுக்கு, நான்காவது கட்டமாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X