Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களின் ஆற்றல்கள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் குறித்தும் கவனம் எடுக்க வேண்டுமென தெரிவித்த, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா சில்வா, ஆசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கல்வியை புகட்டினாள் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல நேண்டிய அவசியம் ஏற்படாது. கடவுள் துணையாக இருப்பார், நீங்கள் எப்போதும் கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வீர்கள்,எனவே, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் மிகவும் கரிசனை காட்ட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட வடக்கு கல்வி வலயத்தில் புதியதொரு பாடசாலையை இன்று (18) திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நகர்ப்புறத்தில் கிடைக்கின்ற அனைத்து வசதிகளையும் கிராமப்புற பாடசாலைகளுக்கு வழங்கி வைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், கல்வி கற்பதற்கு அனைவருக்கும் ஒரே விதமான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இல்லாவிட்டால் ஒரே குவியலில் காணப்படும் மாம்பழத்தில் ஒரு மாம்பழம் பழுதாகிவிட்டால் அனைத்து மாம்பழங்களும் பழுதடையும் சாத்தியக்கூறு ஏற்படும். ஆகவே, ஆசிரியர்கள் மாணவர்கள் விடயத்தில் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா இதன்போது கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அபேவர்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜி. முத்துபண்டா, யான் உயர்த்திட இணைப்பாளர் ஹேம குமார, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
8 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Aug 2025