2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சுகாதாரத் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள், நேற்று (29) காலை, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுடன் கடமையாற்றிவரும் சாரதியான இராசலிங்கம் உதயகுமார் என்பவரை, நேற்று முன்தினம் (27) தாக்கியதாகக் கூறி தாக்கிய சந்தேகநபரான திருகோணமலை நகரசபை உறுப்பினர் காளிராஜா கோகுலராஜன் என்பவரைக் கைதுசெய்யுமாறு கோரியே, இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள வேலைத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதாரத் தொழிலாளர்கள் கலந்துகொண்டதுடன், பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.

இதனையடுத்து, அவ்விடத்துக்கு விஜயம் மேற்கொண்ட திருகோணமலை நகர சபையின் செயலாளர் ஜே.விஷ்ணு, 14 நாள்களுக்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறும் தொடர்ந்தும் தொழிலாளர்கள் தமது கடமையில் ஈடுபடுமாறும் கூறியதை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X