ஒலுமுதீன் கியாஸ் / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, குச்சவெளி கடலில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தி, மீன்பிடியில் ஈடுபட்ட 18 மீனவர்கள், கடல் மற்றும் நீரியியல் வள பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, குச்சவெளி நீதவான் நீதிமன்றில் இன்று (16) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இந்த நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதவான் சாமிலா ரத்நாயக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, 1200 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெண்கள் இருவர் உள்ளிட்ட ஐவருக்கு, தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் புல்மோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நபரொருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதவான் உத்தரவிட்டார்.
23 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
1 hours ago