எப். முபாரக் / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஏ.பாஹிர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச பிரதான அமைப்பாளர்களுடனான சந்திப்பு, கந்தளாய் குளக்கரை பகுதியில் நேற்று (14) நடைபெற்ற போதே, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.
அவருக்கான உறுப்புரிமையை, சேருவிலத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் வைத்தியர் அருண சிறிசேனாவிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
கந்தளாய் பிரதேசத்திலுள்ள 23 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் கட்சியின் முக்கியஸ்தகர்கள் கலந்துகொண்டிருந்த மேற்படி சந்திப்பில், எதிர்வரும் தேர்தல் விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026