Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 24 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
பிளாஸ்டிக் முகாமைத்துவம் மற்றும் சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நேற்று (23) நடைபெற்றது.
இந்த கருத்தரங்கு, லயோலா சுற்றுச்சூழல் மற்றும் நீதி மையத்தின் பணிப்பாளர் வண. டொக்டர் Thierry J.Robouam தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்துரைத்த லயோலா சுற்றுச்சூழல் மற்றும் நீதி மையத்தின் பணிப்பாளர், “பிளாஸ்டிக் என்பது எம் வாழ்வோடு இணைந்து விட்டது. சில, பல காரணங்களால் அவையை தவிர்க்க முடியாது. என்றாலும், நாம் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பது மற்றும் அதனை சரியான முறையில் பயன்படுத்துவது மூலம் கட்டுப்படுத்த முடியும்.
“திருகோணமலை நகரில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் ஆழ்கடல், கரையோர பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளில் காணப்படுகிறது. எமது நகர கடல் பகுதியில் உள்ள கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளே உள்ளது. அவை காலப்போக்கில் சிதைவடைந்து மீனுக்கு இரையாக மாறுகிறது. அந்த மீனை நாம் உண்கிறோம்.
“நாம் பிளாஸ்டிக் அரிசி மற்றும் முட்டை எனக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் பிளாஸ்டிக் மீன்களை உண்பது எமக்கு தெரியாமலே நடக்கின்றது.
“எமது நகரம் சுற்றுலா தளமாக இருப்பதும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக வீசப்பட ஒரு காரணமாக உள்ளது. என்றாலும், நாம் இதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும்.
“ஆகவே, நாம் முதல் கட்டமாக பாடசாலைகளில் பிளாஸ்டிக் முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஆரம்பித்துள்ளோம். அத்தோடு, பிளாஸ்டிக் சேகரிக்கும் தொட்டிகளும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் பல பாடசாலைகளில் இது தொடரும். பின்பு இதற்கான செயல்திட்டங்களை பொது வெளியில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார். (N)
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago