2025 மே 21, புதன்கிழமை

சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும்; வகையில் செயற்பட்ட உணவகத்தை மூட உத்தரவு

Suganthini Ratnam   / 2016 மே 10 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும்; வகையில் செயற்பட்ட உணவகத்தை எதிர்வரும் ஜுன் மாதம் 27ஆம் திகதி வரை மூடுமாறு கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்ற நீதவான் ஜே.பிரபாகரன், இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

திருகோணமலை, ஹொரவப்பொத்தானை பிரதேசத்திலுள்ள உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டபோது, காலாவதியான உணவுகள்  மற்றும் சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவுகளை வைத்திருந்த பல உணவகங்களை கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரியப்படுத்தியபோது, மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட குறித்த உணவகத்தை மூடுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி பிரதேசத்தில் சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவகங்களில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்தே, சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .