2025 மே 23, வெள்ளிக்கிழமை

சிங்கி இறால் பிடித்தவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

தடை செய்யப்பட்ட சிங்கி இறால்களை பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்களுக்கு, மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இன்று வியாழக்கிழமை,  தலா 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்துக்குட்பட்ட இலக்கந்தை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட  சிங்கி இறால்களை பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்களை சம்பூர் கடற் படையினர் கைது செய்து சம்பூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவ்வாறு கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மீனவர்களையும் சம்பூர் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலை ஆஜர்படுத்தியதையடுத்து இருவருக்கும் தலா 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X