Suganthini Ratnam / 2016 மார்ச் 02 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, மூதூர் கிழக்கு சீதனவெளிக் கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய ஆடைத் தொழிற்சாலையொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆடைத்தொழிற்சாலையின் மூலம் 500 இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன் ஜெ.ஜெனார்த்தனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026