2025 மே 21, புதன்கிழமை

சேதமடைந்துள்ள பஸ் தரிப்பிடம்

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பொது வைத்தியசாலைக்கு எதிரேயுள்ள பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பஸ் தரிப்பிடம், சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, மூதூர் அல்லது திருகோணமலைக்குப் பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இந்த பஸ் தரிப்பிடத்திலுள்ள ஆசனம் உடைந்து காணப்படுவதால், வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களும், சிறுவர்கள், முதியோரும் பஸ் வரும்வரை நிற்க வேண்டி ஏற்படுகிறது.

இது தொடர்பில், உரிய அதிகாரிகள் கவனமெடுத்து, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X