Suganthini Ratnam / 2016 மார்ச் 09 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, பக்மீகம கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் சாராயத்தை விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரையும் ஆண்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை (08) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் மூன்று பேரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், எதிர்வரும் 14ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறும் பொலிஸார் பணித்துள்ளனர்.
மேற்படி கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனை இடம்பெறுவதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு 24, 27 வயதுகளை உடைய இச்சந்தேக நபர்கள் மூன்று பேரையும் வெவ்வேறு இடங்களில் சாராயத்துடன் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026