Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
முதுபெரும் எழுத்தாளர் அமரர் வ.அ.இராசரெத்தினத்தின் 90ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் சிறுகதைப் போட்டி நடத்தவுள்ளது.
அகில இலங்கை ரீதியில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே 10,000, 7,000, 3,000 ரூபாய் பணப் பரிசில்களுடன் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், ஐந்து சிறுகதைகளுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் பிரதேச மண்வாசனையை பிரதிபலிக்ககக்கூடியவாறு ஆறு பக்கங்களுக்கு (ஏ 4) மேற்படாது சிறுகதையை கணினியில் அச்சிட்டு அனுப்புதல் வேண்டும்.
சிறுகதையுடன் தனியானதொரு தாளில் கதையின் பெயர், எழுதியவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அமரர் வ.அ.இராசரெத்தினம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி, மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், நொக்ஸ் வீதி மூதூர் -05 என்னும் முகவரிக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு அனுப்ப வேண்டும்.
போட்டி சம்பந்தமான மேலதிக விவரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் 0774203500, 0778051888 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியுமென மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் கேட்டுள்ளது.
8 minute ago
22 minute ago
30 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
30 minute ago
49 minute ago