2025 மே 23, வெள்ளிக்கிழமை

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி நெறி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சிறைச்சாலைகளில் கடமையாற்றும் இரண்டாம் வகுப்பு ஜெயிலர் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறி, சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (10) வரை நடைபெறவுள்ளதாக சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியின் அத்தியட்சகர் எம்.எப்.லாஹிர் அறிவித்துள்ளார். 

இப்பயிற்சி நெறியில் 40 உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதோடு தலைமைத்துவப் பண்புகள், பொறுப்பேற்றல், வேலைகளை செம்மைப்படுத்தல், ஆயுதப் பாவனை மற்றும் சிறைச்சாலைகளை வழிநடத்தல் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் இதற்காகப் பெயர் குறிப்பிடப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் குறித்த தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்துகொள்ளுமாறு சிறைச்சாலைகள் பயிற்சிக் கல்லூரியின் அத்தியட்சகர் எம்.எப்.லாஹிர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X