Niroshini / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலக்சி கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்த 21 வயது இளைஞனையும் சிறுமியையும் சேருநுவர பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை இன்று வியாழக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் இளைஞனை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மூதூர் நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டிலிருந்து அண்மையில் நாட்டுக்கு திரும்பியுள்ளார். வந்த பின் தனது மகள் 21 வயது இளைஞனுடன் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வருவதாக ஊர் மக்கள் மூலம் அவருக்கு அறியக் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தல் செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
7 minute ago
21 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
29 minute ago
48 minute ago