Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மிரிஸ்வெவ பகுதியில் 13 வயதுச் சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 35 வயதுடைய பெண்ணொருவரை இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான சிறுமி மகாதிவுள்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி சிறுமியின் வீட்டுக்கு அருகிலுள்ள இப்பெண் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை தாக்கியமை தொடர்பில் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் தாய் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இப்பெண்ணை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட இப்பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago