Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
திருகோணமலை, தோப்பூர் ஜின்னாநகர் பகுதியிலுள்ள உப தபாலகம் மற்றும் கடைகளில் வியாழக்கிழமை அதிகாலை திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உப தபாலகம் உடைக்கப்பட்டு 17,740 ரூபாய் திருடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த உப தபாலகத்துக்கு அருகிலிருந்து இரண்டு தேநீர் கடைகள் உடைக்கப்பட்டு பால்மா மற்றும் பிஸ்கட் பக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளன. மேலும், இரும்புப்பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் உடைக்கப்பட்டு 5,000 ரூபாய் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago