Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Thipaan / 2016 ஜூன் 12 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை-குச்சவெளி கடற்பரப்பில், இன்று அதிகாலை(12) வேளையில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, டைனமைட் வெடித்தில் படுகாயமடைந்த ஒருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்தநபர், சட்டவிரோதமான முறையில் டைனமைட் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், குச்சவெளி, ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மட் சியாம் ( 34 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இந்த நபர், படுகாயமடைந்த நிலையில் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், டைனமைட் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago