2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தகவல் அறியும் சட்டம் மூலம் நன்மை கிடைக்கும்

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் , ஏ.எம்.ஏ.பரீத், பதுர்தீன் சியானா

தகவல் அறியும் சட்டம் மூலம் இந்த நாட்டில் அனைத்து சமூகமும் நன்மை அடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அனுசரணையுடன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன் சூரியன் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று  வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை ஜக்காப் கோட்டில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில்

திருகோணமலை மாவட்டத்தில் தகவல்  அறியும் சட்டம் தொடர்பாக இந்த செயலமர்வை இம்மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப் படுவதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.

இம் மாவட்டத்தில் 20 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் உள்ளனர். இவர்கள்  தகவல் அறியும் சட்டம் தொடர்பில்  தெளிவற்று காணப்படுகின்றனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X