Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2018 செப்டெம்பர் 29 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்ட 445 தொண்டராசிரியர்களில், தகுதி இருந்தும்117 தொண்டராசிரியர்கள் எதுவித நியாயமான காரணங்களுமின்றி நிரந்தர நியமனத்துக்கான பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, அநீதி இழைக்கப்பட்ட இத்தொண்டராசிரியர்கள் விடயத்தில் கவனம் எடுக்குமாறு, கிழக்கு மாகாண தமிழர் தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் நா. அன்பழகன், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, நேற்று (28) வழங்கிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இதுகால வரையில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் எதுவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, தாங்கள் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்களின் நியாயமான கோரிக்கையை கேட்டு அமைச்சரவையால் வழங்கப்பட்ட பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில், நியாயங்களை பெற்றுத்தர ஆவண செய்து தருமாறு, மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்” எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
6 hours ago